Enter your Email Address to subscribe to our newsletters

நாகை, 23 ஆகஸ்ட் (ஹி.ச)
நாகை மாவட்டத்தில் உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி மாதா பேராலய ஆண்டு திருவிழா ஆகஸ்ட் மாத இறுதியில் கோலாகலமாக தொடங்க உள்ளது. இந்த திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்பதால், பக்தர்களின் வசதிக்காக தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.
அதன்படி, சென்னை புறநகர் பகுதியான தாம்பரத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
இந்த சிறப்பு ரயில் வரும் ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 7 ஆகிய இரண்டு நாட்கள் இரவு 11.50 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும். இந்த ரயில் மறுநாள் காலை 7.45 மணிக்கு வேளாங்கண்ணியை சென்றடையும்.
இதேபோல் மறுமார்க்கமாக வேளாங்கண்ணியில் இருந்து தாம்பரத்திற்கும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் ஆகஸ்ட் 26, செப்டம்பர் 2 மற்றும் செப்டம்பர் 9 ஆகிய தேதிகளில் அதிகாலை 12.45 மணிக்கு வேளாங்கண்ணியில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 7.30 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும்.
வேளாங்கண்ணி திருவிழாவிற்கு செல்லும் பக்தர்களின் கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில் இந்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளதாகவும், பக்தர்கள் முன்கூட்டியே பதிவு செய்து பயன்பெறலாம் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b