திருச்சியில் விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் போராட்டம்
திருச்சி, 24 ஆகஸ்ட் (ஹி.ச.) தமிழகத்தில் பால் கொள்முதல் விலையை பசும்பாலுக்கு 44, எருமைபாலுக்கு 60 ரூபாய் உயர்த்தி வழங்க தமிழக அரசை வலியுறுத்தி, இன்று முதல் ஆவினுக்கு தொடர் பால் நிறுத்த போராட்டத்தில் ஈடுபடபோவதாக தமிழக அரசுக்கு தமிழ்நாடு பால் உற்பத்த
Protest


திருச்சி, 24 ஆகஸ்ட் (ஹி.ச.)

தமிழகத்தில் பால் கொள்முதல் விலையை பசும்பாலுக்கு 44, எருமைபாலுக்கு 60 ரூபாய் உயர்த்தி வழங்க தமிழக அரசை வலியுறுத்தி, இன்று முதல் ஆவினுக்கு தொடர் பால் நிறுத்த போராட்டத்தில் ஈடுபடபோவதாக தமிழக அரசுக்கு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் அறிவித்திருந்தது

அதன்படி திருச்சி மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 24 ஆம் தேதி) ஆவினுக்கு பால் வழங்குவதை நிறுத்தி விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

மேலும் அகிலாபேட்டை கிராமத்தில், அயிலாப்பேட்டை பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் எதிரில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட செயலாளர் அயிலை சிவசூரியன் தலைமையில் ஏராளமான மாடுவளர்ப்போர் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் பால் விலையை உயர்த்தி வழங்காமல் விவசாயிகளை வஞ்சிக்கும் தமிழக அரசுக்கு கண்டித்து முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Hindusthan Samachar / ANANDHAN