காக்கிநாடா கடலில் 2 இளைஞர்கள் மாயம் - தேடுதல் பணியை தீவிரப்படுத்த பவன் கல்யாண் உத்தரவு!
காக்கிநாடா , 24 ஆகஸ்ட் (ஹி.ச.) காக்கிநாடா அருகே கடலில் குளிக்கச் சென்ற 4 இளைஞர்களில் 2 பேர் ராட்சத அலையில் சிக்கி கடலில் மாயமானார்கள். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மற்ற 2 இளைஞர்கள் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்ச
A


காக்கிநாடா , 24 ஆகஸ்ட் (ஹி.ச.)

காக்கிநாடா அருகே கடலில் குளிக்கச் சென்ற 4 இளைஞர்களில் 2 பேர் ராட்சத அலையில் சிக்கி கடலில் மாயமானார்கள். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மற்ற 2 இளைஞர்கள் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடலில் குளிக்க சென்ற இளைஞர்கள்

காக்கிநாடா கிராமப்புற மண்டலம் சூர்யாராவுபேட்டை பகுதியில் உள்ள என்.டி.ஆர். கடற்கரைக்கு சீடிகா கிராமத்தைச் சேர்ந்த இரட்டையர்களான அனசூரி வீரபாபு, ஸ்ரீகணேஷ் சாயிராம் மற்றும் அவர்களது நண்பர்களான படாலா யுவகிஷோர், காதா ஆதித்ய வெங்கட சந்தீப் குமார் ஆகிய 4 பேரும் சென்றனர்.

அவர்கள் கடலில் குளித்துக் கொண்டிருந்தபோது திடீரென எழுந்த ராட்சத அலை ஒன்று வீரபாபு மற்றும் யுவகிஷோரை கடலுக்குள் இழுத்துச் சென்றது. இதனால் அவர்கள் இருவரும் மாயமானார்கள்,

2 பேர் உயிர் தப்பினர்.

இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த ஸ்ரீகணேஷ் சாயிராம் மற்றும் சந்தீப் குமார் உடனடியாக கரைக்கு வந்தனர். அவர்களை அப்பகுதி மக்கள் மீட்டு காக்கிநாடா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மாயமானவர்களில் வீரபாபு, ஸ்ரீகணேஷ் சாயிராமின் இரட்டையர் சகோதரர் ஆவார். இதனால் அவர்களது குடும்பத்தினர் பெரும் சோகத்தில் உள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து ஆந்திர மாநில துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் கடும் அதிர்ச்சியும் கவலையும் தெரிவித்தார்.

மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டை தொலைபேசியில் தொடர்புகொண்டு சம்பவம் குறித்து கேட்டறிந்தார்.

மாயமான இளைஞர்களை கண்டுபிடிக்கும் வகையில் தேடுதல் பணியை உடனடியாக தீவிரப்படுத்த வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டுக்கு உத்தரவிட்டார்.

பயிற்சி பெற்ற நீச்சல் வீரர்கள், சிறப்பு மீட்புக்குழுவினர், கடலோர போலீசார், கடலோர காவல்படை மற்றும் உள்ளூர் மீனவர்களின் உதவியையும் தேடுதல் பணியில் பயன்படுத்துமாறு அவர் அறிவுறுத்தினார்.

மேலும், மாயமான இளைஞர்களின் குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளை வழங்கி, அவர்களுக்கு ஆறுதல் அளிக்க வேண்டும் என்றும் உள்ளூர் எம்.எல்.ஏ. பந்தம் நானாஜியிடம் பவன் கல்யாண் கேட்டுக்கொண்டார்.

மாயமான 2 இளைஞர்களையும் தேடும் பணி போலீசார் மற்றும் மீட்புக்குழுவினரால் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA