Enter your Email Address to subscribe to our newsletters

விஜயவாடா , 24 ஆகஸ்ட் (ஹி.ச.)
சிராவண மாதத்தின் 3-வது வெள்ளிக்கிழமை விஜயவாடாவில் புதிய அரசியல் கட்சியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளதாக முன்னாள் எம்.பி. விஜயசாயி ரெட்டி தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது அறிக்கையில் கூறுவது.
புதிய கட்சியின் பெயர், கொடி, கொள்கைகள், செயல்பாடுகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து அன்றைய தினம் முழுமையாக வெளியிடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மக்களின் பிரச்சினைகளுக்காக போராடுவதற்கும், அவர்களின் குரலை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வதற்கும் சட்டமன்றத்தில் அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சி அந்தஸ்து அவசியமில்லை என்று விஜயசாயி ரெட்டி தெரிவித்துள்ளார்.
மக்களின் கோரிக்கைகளையும், அன்றாட பிரச்சினைகளையும் நேரடியாக சட்டமன்றம் மற்றும் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வதற்காக வலுவான சுயாதீன அரசியல் அமைப்பை உருவாக்குவதே தனது நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆந்திர மாநிலத்தில் தற்போது ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியே ஒரே அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சியாக உள்ளது.
இந்த நிலையில், புதிய அரசியல் கட்சியை தொடங்கும் விஜயசாயி ரெட்டியின் அறிவிப்பு ஆந்திர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA