சட்டமன்றக் கூட்டத் தொடரானது ஒரு பட்டிமன்றம் போல் மாறிவிட்டது - விஜய பிரபாகரன் விமர்சனம்!
சென்னை, 24 ஆகஸ்ட் (ஹி.ச.) சென்னை அனகாபுத்தூர் பகுதியில், மறைந்த கேப்டன் விஜயகாந்த்தின் பிறந்தநாளை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டம் கழக. சார்பில் செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் அனகை. முருகேசன் தலைமையில், 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் அதிக மதிப்பெ
க


சென்னை, 24 ஆகஸ்ட் (ஹி.ச.)

சென்னை அனகாபுத்தூர் பகுதியில், மறைந்த கேப்டன் விஜயகாந்த்தின் பிறந்தநாளை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டம் கழக. சார்பில் செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் அனகை. முருகேசன் தலைமையில், 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழா நடைபெற்றது.

இவ்விழாவில், தேமுதிக மாநில இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது மேடையில் பேசிய அவர்,

தேமுதிக என்பது பணக்காரர்கள் சேர்ந்து ஆரம்பித்த கட்சி அல்ல என்றும், ஏழைத் தொழிலாளிகள், விவசாயிகள் மற்றும் கூலித் தொழிலாளிகளுக்காக உருவாக்கப்பட்ட கட்சி என்றும் தெரிவித்தார்.

கடந்த 20 ஆண்டுகளாக இக்கட்சிக்காக தாங்கள் போராடி வந்தாலும், இன்றளவும் பொதுமக்களிடமிருந்து தமக்குரிய சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்துவதாகக் கூறினார்.

மேலும், பொதுமக்கள் மாற்றத்தை நோக்கியே வாக்களித்திருந்தாலும், தற்போதைய சூழலில் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளதாகவும், தற்போதைய ஆளும் கட்சிக்கு ஆரம்பத்தில் அடித்தளம் அமைத்துக் கொடுத்தவர் கேப்டன் விஜயகாங்த்தான் என்ற உண்மையை யாராலும் மாற்ற முடியாது என்றும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், கடந்த தேர்தலின் போது தாங்கள் விலை உயர்ந்த கார் வாங்கியதாகப் பொய் கூறப்பட்டதாகக் குற்றம் சாட்டியதுடன், சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் தங்களிடம் கார் உள்ளது என்று தெளிவாகக் குறிப்பிட்ட விவரங்கள் இருக்க, தற்போது கார் இல்லை ஆட்டோவில் வருகிறோம் என்று கூறுவது முரணாக உள்ளதாகவும், இங்கு உண்மைக்கு இடம் இல்லை என்றும் தெரிவித்தார்.

மேலும், மறைமுகமாக ஆளும் கட்சியினர் பாஜகவிற்கு ஆதரவு தெரிவித்து வருவதாகக் கூறிய அவர், தற்போதைய சட்டமன்றக் கூட்டத் தொடரானது ஒரு பட்டிமன்றம் போல் மாறிவிட்டதாகவும், தலைவர்கள் ஒருவரையொருவர் மாற்றி மாற்றி குறை கூறுவதிலும் வாழ்த்துத் தெரிவிப்பதிலும் மட்டுமே காலம் கழிப்பதாகவும் கடுமையாக விமர்சித்தார்.

எனக்கு உங்கள் மீது எந்தக் கோபமும் இல்லை அண்ணன் விஜய் முதல்வர் ஆன பிறகு அனைத்து கட்சித் தலைவர்களையும் நேரில் சந்தித்தார், ஆனால் பெரியார் சமாதிக்குச் செல்லத் தெரிந்த அவருக்கு கேப்டன் சமாதிக்கு ஏன் போகத் தோன்றவில்லை?என்ற கேள்வியையும் முன்வைத்தார்.

மேலும் இவ்விழாவில். மாணவ மாணவியர் தேமுதிக நிர்வாகிகள் . தொண்டர்கள் மகளிர் அணியினர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Hindusthan Samachar / Durai.J