Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 24 ஆகஸ்ட் (ஹி.ச.)
தமிழக அரசின் சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பூந்தமல்லியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் இன்று காலை வழக்கம் போல் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.
அதனை பள்ளி மாணவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது சாப்பாட்டில் பல்லி இருப்பதைக் கண்டு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக சாப்பாடு கொடுப்பது நிறுத்தப்பட்டு உணவை சாப்பிட்டு 11 குழந்தைகள் பூந்தமல்லி அரசு மருத்துவமனை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு மருத்துவர்கள் 11 மாணவர்களுக்கும் சிகிச்சை அளித்து வருகின்றனர் மேலும் சமையல் செய்து மற்ற பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட உணவையும் மாணவர்களுக்கு வழங்க வேண்டாம் என எச்சரிக்கை கொடுத்து நிறுத்தப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது
Hindusthan Samachar / Durai.J