Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி , 24 ஆகஸ்ட் (ஹி.ச.)
இமாச்சல பிரதேசம் மற்றும் லடாக்கில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது.
இமாச்சல பிரதேசத்தின் சம்பா பகுதியில் இன்று அதிகாலை 3.40 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவுகோலில் 3.0 ஆக பதிவான இந்த நிலநடுக்கம், பூமிக்கு அடியில் 8 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் மையப்பகுதி 32.925 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 76.145 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருந்ததாக முதற்கட்டமாக கணிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, லடாக்கின் லே பகுதியில் இன்று காலை 8.25 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவான இந்த நிலநடுக்கம், பூமிக்கு அடியில் 120 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மையப்பகுதி 36.700 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 74.343 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருந்ததாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்துக்கும், லடாக்கில் ஏற்பட்ட நிலநடுக்கத்துக்கும் இடையே சில மணி நேர இடைவெளியே இருந்ததால் அப்பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது.
எனினும், இந்த இரு நிலநடுக்கங்களாலும் ஏற்பட்ட சேதம் அல்லது உயிரிழப்பு குறித்த தகவல்கள் வெளியாக வில்லை.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA