களக்காடு தலையணை பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை
திருநெல்வேலி, 24 ஆகஸ்ட் (ஹி.ச.) திருநெல்வேலி மாவட்டம் களக்காடு தலையணை பகுதியில் நீர்வரத்து குறைவாக இருப்பதால், அப்பகுதியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும், பார்வையிடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் களக்காடு
Kalakkadu Thalaiyanai


திருநெல்வேலி, 24 ஆகஸ்ட் (ஹி.ச.)

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு தலையணை பகுதியில் நீர்வரத்து குறைவாக இருப்பதால், அப்பகுதியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும், பார்வையிடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் களக்காடு வனக்கோட்டம், களக்காடு வனச்சரகத்திற்கு உட்பட்ட தலையணை சூழல் சுற்றுலா பகுதியில் வழக்கத்தைவிட நீர்வரத்து குறைந்துள்ளது. இதையடுத்து சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு வனத்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

களக்காடு வனச்சரகத்திற்கு உட்பட்ட தலையணை சூழல் சுற்றுலா பகுதியில் இன்று (24.08.2026( முதல் மறு உத்தரவு வரும் வரை சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கும், அப்பகுதியை பார்வையிடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அறிவித்துள்ளது.

களக்காடு வனக்கோட்ட துணை இயக்குனர் மற்றும் வன உயிரின காப்பாளர் உத்தரவின்படி இந்த தடை நடவடிக்கை அமல்படுத்தப்பட்டுள்ளது. தலையணை பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் வனத்துறையின் அறிவுறுத்தல்களை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

நீர்வரத்து மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு நிலவரத்தை கருத்தில் கொண்டு, பின்னர் தடை நீக்குவது தொடர்பாக வனத்துறை நிர்வாகம் முடிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / ANANDHAN