பெண்கள் மீது அநாகரிகமான தாக்குதல்கள் - கனிமொழி கருணாநிதி வேதனை
சென்னை, 24 ஆகஸ்ட் (ஹி.ச.) சமீபத்தில் சமூக வலைதளங்களில் மாடர்ன் உடையில் இருக்கும் ஒரு பெண்ணின் வீடியோ உலா வந்தது. அந்தப் பெண் தற்போதைய தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனாதான் என்று விமர்சிக்கப்பட்டது. ஆனால் அது அவரில்லை என்பதும் நிரூபணமானது. இதனைக் கண்ட
Kanimozhi MP


சென்னை, 24 ஆகஸ்ட் (ஹி.ச.)

சமீபத்தில் சமூக வலைதளங்களில் மாடர்ன் உடையில் இருக்கும் ஒரு பெண்ணின் வீடியோ உலா வந்தது. அந்தப் பெண் தற்போதைய தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனாதான் என்று விமர்சிக்கப்பட்டது. ஆனால் அது அவரில்லை என்பதும் நிரூபணமானது.

இதனைக் கண்டித்து தவெகவினர் மேயர் பிரியாவை விமர்சிக்கத் தொடங்கினர்.

இந்த நிலையில் எம்.பி. கனிமொழி கருணாநிதி தனது எக்ஸ் தளத்தில்,

காலம் காலமாக, கட்சி வேறுபாடின்றி பொதுவாழ்வில் இருக்கும் பெண்கள் மீது அநாகரிகமான தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன.

ஆணாதிக்கம் நிறைந்த அரசியல் களத்தில் துணிச்சலுடன் செயலாற்றும் பெண்களை கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாமல், அவர்களின் உடை, தோற்றம், தனிப்பட்ட வாழ்க்கை போன்றவற்றை வைத்து விமர்சிப்பது மலினமான அரசியலின் வெளிப்பாடாகும். இத்தகைய தாக்குதல்களில் ஈடுபடுபவர்களின் பிற்போக்குத்தனமான மனநிலையே இதன் மூலம் வெளிப்படுகிறது.

பெண்கள் இதையெல்லாம் கடந்தே வெற்றி பெற வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

Hindusthan Samachar / ANANDHAN