மதுரையில் மதுபோதையில் கார் ஓட்டி குழந்தை மீது மோதிய வாலிபர் கைது
மதுரை, 24 ஆகஸ்ட் (ஹி.ச.) மதுரை பாண்டிகோவில் சிவகங்கை சாலையில் மதுபோதையில் கார் ஓட்டியதாக கூறப்படும் வாலிபர், சாலையில் சென்ற குழந்தை மீது காரை மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் காயமடைந்த குழந்தைக்கு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் ச
க


மதுரை, 24 ஆகஸ்ட் (ஹி.ச.)

மதுரை பாண்டிகோவில் சிவகங்கை சாலையில் மதுபோதையில் கார் ஓட்டியதாக கூறப்படும் வாலிபர், சாலையில் சென்ற குழந்தை மீது காரை மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதில் காயமடைந்த குழந்தைக்கு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. லேசான காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

விபத்தை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக காரை ஓட்டி வந்த வாலிபரை விரட்டி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

அந்த வாலிபர் வடமாவட்டத்தைச் சேர்ந்த போலீஸ் சூப்பிரண்டு ஒருவரின் நண்பர் என தகவல் பரவியதால், அங்கு திரண்ட பொதுமக்கள் போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து போலீசார் வாலிபரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். காரில் வந்தவர் யார் என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இச்சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக முதற்கட்ட விசாரணையில்போதையில் வாகனத்தை இயக்கியவர் சந்தோஷ் யாதவ் (33 )அண்ணா நகரை சேர்ந்தவர்.

துவாரகா பேலஸ் உரிமையாளரின் மகன் எனதெரிய வந்ததை தொடர்ந்து வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், விபத்துக்கு பயன்படுத்தப்பட்ட கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

குழந்தைக்கு லேசான காயம் ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

Hindusthan Samachar / Durai.J