டெல்லியில் வெளுத்து வாங்கிய கனமழை - 12 விமானங்கள் ஜெய்ப்பூருக்கு திருப்பி விடப்பட்டன
புதுடெல்லி , 24 ஆகஸ்ட் (ஹி.ச.) தலைநகர் டெல்லியில் நேற்று கனமழை வெளுத்து வாங்கியது. டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான நொய்டா, காசியாபாத், குருகுராம் உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கியதுடன், பல்வேறு
A


புதுடெல்லி , 24 ஆகஸ்ட் (ஹி.ச.)

தலைநகர் டெல்லியில் நேற்று கனமழை வெளுத்து வாங்கியது. டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான நொய்டா, காசியாபாத், குருகுராம் உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.

இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கியதுடன், பல்வேறு இடங்களில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

கனமழையால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

இதற்கிடையே, கனமழை காரணமாக டெல்லி விமான நிலையத்திலும் விமான சேவை பாதிக்கப்பட்டது.

மோசமான வானிலை காரணமாக டெல்லியில் தரையிறங்க முடியாத 12 விமானங்கள் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு திருப்பிவிடப்பட்டன.

மேலும், டெல்லி விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் புறப்படுவதிலும் தாமதம் ஏற்பட்டது. இதனால் விமான பயணிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகினர்.

கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் விமான சேவையில் பாதிப்பு மேலும் நீடிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA