பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்படுகிறது - 110 விதியின் கீழ் முதல்வர் விஜய் அறிவிப்பு
சென்னை, 24 ஆகஸ்ட் (ஹி.ச.) தமிழக சட்டப்பேரவையில் இன்று 110 விதியின் கீழ் பேசிய முதலமைச்சர் ஜோசப் விஜய், பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டம் முழுமையாக கைவிடப்படும் என்று அதிரடியாக அறிவித்தார். பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக தொ
Parandur Airport project being dropped


சென்னை, 24 ஆகஸ்ட் (ஹி.ச.)

தமிழக சட்டப்பேரவையில் இன்று 110 விதியின் கீழ் பேசிய முதலமைச்சர் ஜோசப் விஜய், பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டம் முழுமையாக கைவிடப்படும் என்று அதிரடியாக அறிவித்தார்.

பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக தொடர்ந்து போராடி வரும் விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக போராடும் மக்களுடன் நான் உறுதியாக துணை நிற்பேன் என்றும், மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் எந்தவொரு திட்டத்தையும் தனது அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்றும் முதலமைச்சர் உறுதிபட தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், சென்னையின் வளர்ச்சிக்கு புதிய விமான நிலையம் அவசியம் என்பதை உணர்ந்து, அதற்கான பொருத்தமான மாற்று இடம் தேர்வு செய்யப்பட்டு வருவதாகவும், அந்த இடம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறினார்.

அதேவேளையில், தற்போதைய விமான போக்குவரத்து நெரிசலை சமாளிக்கும் வகையில், மீனம்பாக்கத்தில் உள்ள சென்னை சர்வதேச விமான நிலையம் பெரிய அளவில் விரிவாக்கம் செய்யப்படும் என்றும், அங்கு நவீன வசதிகளுடன் கூடிய ஐந்தாவது முனையம் அமைக்கப்படும் என்றும் முதலமைச்சர் விஜய் அறிவித்தார்.

Hindusthan Samachar / vidya.b