Enter your Email Address to subscribe to our newsletters

ராமநாதபுரம், 24 ஆகஸ்ட் (ஹி.ச.)
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சுமார் 700 க்கு மேற்பட்ட விசைப்படகுகளிலும் ஆயிரத்துக்கு மேற்பட்ட நாட்டுப்படகுகளிலும் மீனவர்கள் மீன் பிடி தொழில் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் மன்னார் கடல் பகுதிகளில் வழக்கத்தை விட காற்றின் வேகம் அதிகரித்து மணிக்கு 45 கிலோ மீட்டர் முதல் 65 கிலோ மீட்டர் வரை காற்று வீச கூடும் என கூறப்படுகிறது.
இதனை அடுத்து மறு உத்தரவு வரும் வரை மீனவர் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அதிகாரிக்க அறிவுறுத்தியுள்ளனர்.
இதனை அடுத்து ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் சுமார் 700க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும் 1000க்கும் மேற்பட்ட நாட்டுபடகுகளும் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
இதனால் நேரடியாகவும் மறைமுகமாகவும் 5000க்கும் மேற்பட்ட மீன்பிடி தொழிலை சார்ந்த மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது மட்டுமல்லாது நாள் ஒன்றுக்கு பத்து கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் இழப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
இதேபோல மாவட்டத்தின் பிற பகுதிகளான மண்டபம் தொண்டி உட்பட பல்வேறு பகுதிகளிலும் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.
Hindusthan Samachar / ANANDHAN