ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பு
சபரிமலை, 24 ஆகஸ்ட் (ஹி.ச.) ஓணம் பண்டிகையை முன்னிட்டு பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறக்கப்படுகிறது. இன்று மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் தொடங்கும் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிவித்துள்ளது
ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பு


சபரிமலை, 24 ஆகஸ்ட் (ஹி.ச.)

ஓணம் பண்டிகையை முன்னிட்டு பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறக்கப்படுகிறது.

இன்று மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் தொடங்கும் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிவித்துள்ளது.

ஓணம் திருவிழாவையொட்டி வரும் ஆகஸ்ட் 28-ஆம் தேதி வரை சபரிமலையில் சிறப்பு வழிபாடுகள் மற்றும் பூஜைகள் நடைபெற உள்ளன.

இந்த நாட்களில் தினமும் அதிகாலை முதலே பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

ஓணம் பண்டிகை காலம் என்பதால் கேரளா மட்டுமின்றி தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேவசம் போர்டு செய்து வருகிறது. பக்தர்களின் வசதிக்காக கூடுதல் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

ஓணம் சிறப்பு பூஜைகள் நிறைவடைந்த பின்னர், வரும் ஆகஸ்ட் 28-ஆம் தேதி இரவு 10 மணிக்கு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை சாத்தப்படும் என்றும் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.

Hindusthan Samachar / vidya.b