கழிவு நீரை வெளியேற்றாத ஊராட்சி நிர்வாகம் மற்றும் வட்டார வளர்ச்சி அதிகாரிகளை கண்டித்து நாளை பொதுமக்கள் முற்றுகை போராட்டம்!
மதுரை, 24 ஆகஸ்ட் (ஹி.ச.) மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே முதலைக்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட கொசவபட்டியில் பல மாதங்களாக கழிவு நீர் தேங்கி வெளியேறாமல் உள்ளது. கழிவு நீரை வெளியேற்ற முறையாக கால்வாய் கட்டாததால் தெருக்களிலும் வீடுகளுக்கு முன்பும்
_


மதுரை, 24 ஆகஸ்ட் (ஹி.ச.)

மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே முதலைக்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட கொசவபட்டியில் பல மாதங்களாக கழிவு நீர் தேங்கி வெளியேறாமல் உள்ளது.

கழிவு நீரை வெளியேற்ற முறையாக கால்வாய் கட்டாததால் தெருக்களிலும் வீடுகளுக்கு முன்பும் கழிவு நீர் தேங்கி சுகாதார கேடு ஏற்பட்டு வருகிறது.

இதுகுறித்து முதலைக்குளம் ஊராட்சி செல்லம்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலகம் ஆகியவற்றில் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

சில தனி நபர்களின் செயல்பாடுகளால் கழிவுநீர் கட்டுவதில் பிரச்சனைகள் ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு கழிவு நீர் கட்டுவதற்காக நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்ட நிலையில் திடீரென பணிகள் நிறுத்தப்பட்டிருந்தது.

இதன் காரணமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தொற்றுநோய் பரவி விக்கிரமங்கலம் கருமாத்தூர் ஆகிய மருத்துவமனைகளுக்கு அதிக அளவில் செல்லக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஆகையால் கழிவுநீர் வடிகால் வசதி செய்து தராத முதலைக்குளம் ஊராட்சி நிர்வாகம் மற்றும் செல்லம்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகளை கண்டித்து நாளை செவ்வாய்க்கிழமை செல்லம்பட்டி யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக கொசவபட்டி கிராம பொதுமக்கள் சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.

அதிகாரிகள் உடனடியாக கொசவபட்டி கிராமத்தில் கழிவுநீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளனர்

Hindusthan Samachar / Durai.J