Enter your Email Address to subscribe to our newsletters

புதுச்சேரி, 24 ஆகஸ்ட் (ஹி.ச.)
ஓணம் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் இருந்து மாஹேவிற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என புதுச்சேரி அரசு போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.
கேரளாவின் மிக முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகையை கொண்டாடுவதற்காக புதுச்சேரியில் வசிக்கும் மாஹே பகுதியைச் சேர்ந்த மக்கள் மற்றும் கேரள மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக இந்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி புதுச்சேரியில் இருந்து மாஹேவிற்கு இன்றும் நாளையும் என இரண்டு நாட்களுக்கு மாலை 6 மணிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
இதேபோல், ஓணம் பண்டிகை முடிந்து திரும்பி வரும் பயணிகளின் வசதிக்காக வரும் ஆகஸ்ட் 26 மற்றும் 27 ஆம் தேதிகளில் மாஹேவில் இருந்து புதுச்சேரிக்கு மாலை 5 மணிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன் கட்டணமாக ரூ. 770 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன் பதிவிற்கு, புதுச்சேரி பேருந்து நிலையம் மற்றும் மாகே பேருந்து நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு பேருந்து சேவையை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு போக்குவரத்து துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b