தாயில்பட்டி பட்டாசு ஆலையில் திடீர் வெடி விபத்தில் ஒரு அறை சேதம் -ஒருவர் படுகாயம்!
விருதுநகர், 24 ஆகஸ்ட் (ஹி.ச.) விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகிலுள்ள தாயில்பட்டி பகுதியில் உள்ள நாகர் பட்டாசு தொழிற்சாலை திடீர் வெடி விபத்து ஏற்பட்டது தாயில்பட்டி பகுதியைச் சேர்ந்த ராமமூர்த்தி (55) என்பவருக்கு சொந்தமான நாகர் பட்டாசு தொழிற்சாலை மா
க


விருதுநகர், 24 ஆகஸ்ட் (ஹி.ச.)

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகிலுள்ள தாயில்பட்டி பகுதியில் உள்ள நாகர் பட்டாசு தொழிற்சாலை திடீர் வெடி விபத்து ஏற்பட்டது

தாயில்பட்டி பகுதியைச் சேர்ந்த ராமமூர்த்தி (55) என்பவருக்கு சொந்தமான நாகர் பட்டாசு தொழிற்சாலை மாவட்ட வருவாய் துறை உரிமம் பெற்று சிறிய ரக பட்டாசு வெடிகள் தயாரிக்கப்பட்டு வருகிறது

இந்த பட்டாசு ஆலையில் 20 அறைகளில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் பட்டாசு தயாரிக்கும் பணிகள் ஈடுபட்டு வருகின்றனர்

இன்று வழக்கம் போல பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்த போது ஒரு அறையில் பட்டாசு உற்பத்திக்கான திரி தயாரித்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது

அப்போது எதிர்பாராத விதமாக உராய்வினால் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது

இதில் அந்த அறை முழுவதும் பற்றி பலத்த சேதமடைந்துள்ளது

அப்போது அங்கு பணியில் இருந்த தாயில்பட்டி ஊராட்சி கட்டணஞ்சேவல் பகுதியைச் சேர்ந்த வேலுச்சாமி (58) என்பவர் படுகாயம் அடைந்த நிலையில் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்க்கப்பட்டுள்ளார் தீ விபத்து குறித்த தகவல் அறிந்த சிவகாசி தீயணைப்பு வாகனங்கள் பட்டாசு தொழிற்சாலைக்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தன

சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்

இந்த தீ விபத்து குறித்து தாயின் பட்டி கிராம நிர்வாக அலுவலர் பத்மநாதன் புகார் செய்ததன் பேரில் வெம்பக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Hindusthan Samachar / Durai.J