பரந்தூர் விவகாரத்தில் அரசியல் செய்யக் கூடாது - தங்கம் தென்னரசு
சென்னை, 24 ஆகஸ்ட் (ஹி.ச.) பரந்தூர் விமானநிலைய திட்டம் கைவிடப்படும் என் முதல்வர் விஜய் அறிவித்துள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து பேச பேரவையில் அனுமதிக்க வேண்டும் என திமுக உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் சபாநாயகர் 110 விதியின் கீழ் அற
Thangam Thennarasu


சென்னை, 24 ஆகஸ்ட் (ஹி.ச.)

பரந்தூர் விமானநிலைய திட்டம் கைவிடப்படும் என் முதல்வர் விஜய் அறிவித்துள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து பேச பேரவையில் அனுமதிக்க வேண்டும் என திமுக உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.

ஆனால் சபாநாயகர் 110 விதியின் கீழ் அறிவித்துவிட்டதால் அது குறித்து விளக்கம் அளிக்கவோ, விவாதிக்கவோ அனுமதிக்க முடியாது என மறுத்துவிட்டார்.

இதனை தொடர்ந்து பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக மூத்த சட்டமன்ற உறுப்பினர் தங்கம் தென்னரசு,

பரந்தூர் விமான நிலைய திட்டம் குறித்து விவாதிக்க திமுக கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பேச அனுமதிக்க சில நாட்களாக கோரிக்கை வைத்து வந்தோம்.

ஆனால் அனுமதிக்கிறோம், அனுமதிக்கிறோம் என்றே சொல்லி வந்து திடீரென இன்று 110 விதியின் கீழ் அந்த திட்டம் கைவிடப்படுவதாக அறிவித்து, அதன் மீது விவாதம் கிடையாது என்று சொல்லுகிறார்கள்.

எதிர்கட்சியினரின் குரலை ஜனநாயக முறையில் வெளிப்படுத்துவதை முடக்குகிறது இந்த அரசு என்றார்.

தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு பரந்தூர் விமான நிலையம் மிகவும் அவசியமானது. ஒரு விமான நிலையம் என்பது மாநிலத்தின் தொழில் வளர்ச்சிக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் முக்கியமானது.

ஒரு டிரில்லியன் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய ஆதாரமாக விமான நிலையம் இருக்கும். தேசியளவில் 3-ஆம் இடத்தில் இருந்த சென்னை விமான நிலையம் இடத்துக்கு பின்தங்கிவிட்டது.

சென்னையை விஞ்சி பெங்களூரு விமான நிலையம் தற்போது 3-ஆவது இடத்துக்கு முன்னேறிவிட்டது.

திமுக ஆட்சியில் புதிய விமான நிலையம் அமைக்க பரந்தூரை தேர்வு செய்யும் முன்பு, பல இடங்களில் தொழில்நுட்ப ஆய்வு நடத்தப்பட்டது.

வடக்கே பழவேற்காடு ஏரி, கிழக்கே வங்கக்கடல், தெற்கு கல்பாக்கம் இருப்பதால் அங்கு அமைக்க முடியாது. எனவே புதிய விமான நிலையம் அமைக்க பரந்தூர் தான் சிறந்த இடமாக இருக்கும்.

அரசியல் காரணங்களுக்காக இந்த திட்டத்தை கைவிடுவது என்பது ஏற்க முடியாது.

பரந்தூர் திட்டத்தை கைவிட்டதால் வர வேண்டிய மிகப்பெரிய தொழில் வாய்ப்புகள் மறுக்கப்பட்டுள்ளன.

பரந்தூர் விமான நிலையம் கைவிடப்பட்டால் சென்னை, ஸ்ரீபெரும்புதூர் சுற்றியுள்ள தொழில் பாதிக்கப்படும். ஒரு திட்டம் நாட்டுக்கு வரும்போது அதில் அரசியல் செய்யக்கூடாது.

பரந்தூர் விமான நிலையம் இல்லையென்றால் தொழில் நிறுவனங்கள் கைவிட்டுப் போகும். ஏற்கனவே ஒசூர் விமான நிலையத்தை இழந்திருக்கிறோம், இப்போது பரந்தூரையும் இழந்தால் எப்படி? எனவும் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியுள்ளார்.

Hindusthan Samachar / ANANDHAN