Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 24 ஆகஸ்ட் (ஹி.ச)
திருநெல்வேலியில் இருந்து பிரயாக்ராஜ் செல்லும் பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. இணைப்பு ரயில் தாமதமாக வருவதால், திருநெல்வேலி – பிரயாக்ராஜ் சிறப்பு ரயிலின் புறப்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளது.
அதன்படி, 04172 திருநெல்வேலி – பிரயாக்ராஜ் சிறப்பு ரயில், இன்று (ஆகஸ்ட் 24) இரவு 11.30 மணிக்கு திருநெல்வேலி ரயில் நிலையத்தில் இருந்து புறப்படுவதாக இருந்தது.
ஆனால், இந்த ரயிலுக்கான இணைப்பு ரயில் தாமதமாக வந்து சேருவதால், சிறப்பு ரயிலை திட்டமிட்ட நேரத்தில் இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ரயில் புறப்படும் நேரம் 2 மணி நேரம் 30 நிமிடங்கள் தாமதமாக மாற்றப்பட்டுள்ளது.
இதன்படி, இன்று இரவு 11.30 மணிக்கு பதிலாக, நாளை (ஆகஸ்ட் 25) அதிகாலை 2 மணிக்கு திருநெல்வேலி ரயில் நிலையத்தில் இருந்து 04172 சிறப்பு ரயில் புறப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இதனால், இந்த சிறப்பு ரயிலில் பயணம் செய்ய முன்பதிவு செய்துள்ள பயணிகள், மாற்றியமைக்கப்பட்ட புறப்படும் நேரத்தை கவனத்தில் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள், தேவையற்ற காத்திருப்பை தவிர்க்கும் வகையில் புதிய புறப்படும் நேரமான அதிகாலை 2 மணியை கருத்தில் கொண்டு தங்களது பயணத் திட்டத்தை மாற்றியமைத்துக் கொள்ளுமாறு தெற்கு ரயில்வே கேட்டுக்கொண்டுள்ளது.
இணைப்பு ரயில் தாமதம் காரணமாக ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் குறித்து பயணிகள் கவனத்தில் கொண்டு, ரயில் புறப்படும் நேரத்தை உறுதி செய்துகொண்டு பயணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ