புதுக்கோட்டையில் மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள் -அமைச்சர் முகமது பர்வேஸ் வழங்கினார்
புதுக்கோட்டை ,24 ஆகஸ்ட் (ஹி.ச.) புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சாா்பில் 5,248 பேருக்கு ரூ. 4.39 கோடி மதிப்பில் நலத் திட்ட உதவிகளை மாநிலத் தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஜா. முகமது பா்வேஸ் வழங்கினார். புதுக்கோ
க


புதுக்கோட்டை ,24 ஆகஸ்ட் (ஹி.ச.)

புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சாா்பில் 5,248 பேருக்கு ரூ. 4.39 கோடி மதிப்பில் நலத் திட்ட உதவிகளை மாநிலத் தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஜா. முகமது பா்வேஸ் வழங்கினார்.

புதுக்கோட்டை நகா்மன்றத்தில் நடைபெற்ற விழாவில், தொழிலாளர் நலத் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத் துறை, கூட்டுறவுத் துறை மற்றும் மாவட்டத் தொழில் மையம் ஆகியவற்றின் சாா்பில் இந்த நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்விற்கு மாவட்ட வருவாய் அலுவலர் குழந்தைசாமி தலைமை வகித்தார்.

முன்னாள் அமைச்சர் டாக்டர் சி விஜயபாஸ்கர், தொழிலாளர் நலத்துறை ஆணையர் கார்த்திகேயன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மாவட்ட அலுவலர் சூரியபிரபு செய்திருந்தார்

Hindusthan Samachar / Durai.J