இரண்டு நாள் தேசிய பாதுகாப்பு மாநாடு - 850 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பங்கேற்பு!
புதுடெல்லி, 24 ஆகஸ்ட் (ஹி.ச.) தலைநகர் புதுடெல்லியில் தேசிய பாதுகாப்பு தொடர்பான இரண்டு நாள் உயர்மட்ட மாநாடு இன்று கோலாகலமாக தொடங்குகிறது. நாட்டின் தற்போதைய பாதுகாப்பு சூழல் மற்றும் எதிர்கால சவால்களை எதிர்கொள்வது குறித்து விரிவாக விவாதிக்க இ
Two-day National Security Conference


புதுடெல்லி, 24 ஆகஸ்ட் (ஹி.ச.)

தலைநகர் புதுடெல்லியில் தேசிய பாதுகாப்பு தொடர்பான இரண்டு நாள் உயர்மட்ட மாநாடு இன்று கோலாகலமாக தொடங்குகிறது.

நாட்டின் தற்போதைய பாதுகாப்பு சூழல் மற்றும் எதிர்கால சவால்களை எதிர்கொள்வது குறித்து விரிவாக விவாதிக்க இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமை விருந்தினராக கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைத்து சிறப்புரையாற்ற உள்ளார்.

அவருடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர், உளவுத்துறை தலைவர்கள் மற்றும் உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளும் பங்கேற்க உள்ளனர்.

நாடு முழுவதிலும் இருந்து காவல்துறை, துணை ராணுவப் படைகள், உளவு அமைப்புகள் மற்றும் பல்வேறு மத்திய பாதுகாப்பு படைகளைச் சேர்ந்த 850-க்கும் மேற்பட்ட உயர் அதிகாரிகள் இந்த மாநாட்டில் கலந்து கொள்கின்றனர்.

இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் சமகால விவகாரங்கள், எல்லை தாண்டிய பயங்கரவாதம், சைபர் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள், போதைப்பொருள் கடத்தல், தேசிய ஒருமைப்பாட்டிற்கு எதிரான சவால்கள் உள்ளிட்ட பல முக்கிய விவகாரங்கள் குறித்து ஆழமாக ஆலோசிக்கப்பட உள்ளது.

குறிப்பாக நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பை மேலும் வலுப்படுத்துவது, மாநில காவல்துறையினருக்கும் மத்திய பாதுகாப்பு முகமைகளுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பை அதிகரிப்பது மற்றும் நவீன தொழில்நுட்பங்களை பாதுகாப்பு பணிகளில் பயன்படுத்துவது குறித்து இம்மாநாட்டில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / vidya.b