தமிழகத்தில் அக்டோபர் 2 முதல் 'வெற்றி பயணத் திட்டம்' அமல் - முதல்வர் விஜய் அறிவிப்பு
சென்னை, 24 ஆகஸ்ட் (ஹி.ச.) சட்டப்பேரவையில் இன்று 110-வது விதியின் கீழ் பேசிய முதலமைச்சர் ஜோசப் விஜய், தமிழகத்தில் பெண்கள் மற்றும் திருநங்கைகளின் நலனைக் கருத்தில் கொண்டு புதிய பயணத் திட்டம் ஒன்றை அறிவித்துள்ளார். அதன்படி, வரும் அக்டோபர் 2-ம் த
தமிழகத்தில் அக்டோபர் 2 முதல் 'வெற்றி பயணத் திட்டம்' அமல் - முதல்வர் விஜய்  அறிவிப்பு


சென்னை, 24 ஆகஸ்ட் (ஹி.ச.)

சட்டப்பேரவையில் இன்று 110-வது விதியின் கீழ் பேசிய முதலமைச்சர் ஜோசப் விஜய், தமிழகத்தில் பெண்கள் மற்றும் திருநங்கைகளின் நலனைக் கருத்தில் கொண்டு புதிய பயணத் திட்டம் ஒன்றை அறிவித்துள்ளார்.

அதன்படி, வரும் அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தி முதல் 'வெற்றி பயணத் திட்டம்' தமிழகம் முழுவதும் நடைமுறைக்கு வரவுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

இந்தத் திட்டத்தின் மூலம் அரசுப் பேருந்துகளில் மகளிர் மற்றும் திருநங்கைகள் கட்டணமின்றி பயணம் செய்யலாம்.

இதுவரை சாதாரண நகரப் பேருந்துகளில் மட்டுமே இருந்து வந்த இலவசப் பயணச் சலுகை தற்போது விரிவுபடுத்தப்படுவதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

அதன்படி எல்.எஸ்.எஸ் எனப்படும் குறைந்த நிறுத்தம் கொண்ட விரைவுப் பேருந்துகள் மற்றும் டீலக்ஸ் பேருந்துகளிலும் இனி பெண்கள் கட்டணம் இல்லாமல் பயணிக்கலாம்.

இந்த விரிவாக்கம் மூலம் நீண்ட தூரம் பயணம் செய்யும் பெண்களுக்கு பெரும் பயன் கிடைக்கும்.

மேலும் இந்த அறிவிப்பில் மிக முக்கிய அம்சமாக, திருநங்கைகளும் இனி அரசுப் பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் செய்யலாம் என்று முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார். சமூகத்தில் திருநங்கைகளுக்கு சம உரிமையை உறுதி செய்யும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

முன்பதிவு இல்லாமல் இயக்கப்படும் அனைத்து வகையான சாதாரண, விரைவு மற்றும் டீலக்ஸ் பேருந்துகளிலும் இந்த கட்டணமில்லா பயணத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், இதன் மூலம் தினமும் பணிக்குச் செல்லும் லட்சக்கணக்கான பெண்கள் பயனடைவார்கள் என்றும் முதலமைச்சர் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / vidya.b