ஆனைமலை அருகே கோலாகல ஓணம் கொண்டாட்டம்
கோவை, 25 ஆகஸ்ட் (ஹி.ச.) மலையாள மொழி பேசும் மக்களின் பாரம்பரிய பண்டிகையான ஓணம் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், ஆனைமலை அருகே உள்ள நா.மு.சுங்கம் ராமு கலை அறிவியல் கல்லூரியில் ஓணம் விழா கோலாகலமாக நடைபெற்றது. கல்லூரியில் நடைபெற்ற ஓணம் கொண்டாட்டத்தில்
ஓணம்


கோவை, 25 ஆகஸ்ட் (ஹி.ச.)

மலையாள மொழி பேசும் மக்களின் பாரம்பரிய பண்டிகையான ஓணம் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், ஆனைமலை அருகே உள்ள நா.மு.சுங்கம் ராமு கலை அறிவியல் கல்லூரியில் ஓணம் விழா கோலாகலமாக நடைபெற்றது.

கல்லூரியில் நடைபெற்ற ஓணம் கொண்டாட்டத்தில் தமிழக மற்றும் கேரளாவைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். மாணவ, மாணவிகள் கேரளாவின் பாரம்பரிய உடைகளை அணிந்து விழாவில் பங்கேற்றனர்.

விழாவின் சிறப்பு நிகழ்வாக மகாபலி மன்னர் பொலிரோ காரில் கல்லூரிக்கு வருகை புரிந்தார். அவரை கேரள பாரம்பரிய உடை அணிந்த கல்லூரி மாணவிகள் மலர் தூவி உற்சாகமாக வரவேற்றனர்.

தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் மாணவ, மாணவிகள் ஓணம் பண்டிகையின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். ஆட்டம், பாட்டம் மற்றும் நடன நிகழ்ச்சிகளுடன் விழா களைகட்டியது.

தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த மாணவர்கள் ஒன்றிணைந்து ஓணம் விழாவை கொண்டாடியது, இரு மாநிலங்களின் கலாச்சார ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் அமைந்தது. மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் பங்கேற்று தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Hindusthan Samachar / GOKILA arumugam