Enter your Email Address to subscribe to our newsletters

பெங்களூரு, 25 ஆகஸ்ட் (ஹி.ச.)
பெங்களூருவில் சாலையோர பார்க்கிங்கை ஒழுங்குபடுத்தும் வகையில் கர்நாடக அரசு கொண்டுவர உள்ள GBA (Parking) Rules, 2026 வரைவு விதிகளுக்கு காங்கிரஸ் அமைச்சர் ராமலிங்க ரெட்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதலமைச்சர் டி.கே. சிவக்குமாருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், சட்டவிரோத மற்றும் நீண்ட நேர சாலையோர பார்க்கிங்கை கட்டுப்படுத்துவது அவசியம் என்றாலும், ஆண்டுக் கட்டணம் பொதுமக்கள் மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு கூடுதல் நிதிச்சுமையை ஏற்படுத்தும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
வரைவு விதிகளின்படி, வீடுகளுக்கு வெளியே பொது சாலையில் வாகனங்களை நிறுத்த ஹேட்ச்பேக்குக்கு ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம், செடானுக்கு ரூ.20 ஆயிரம், SUV-க்கு ரூ.25 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்க முன்மொழியப்பட்டுள்ளது.
இந்தக் கட்டணங்கள் இறுதி செய்யப்பட்டு அமலுக்கு வருமா என்பது குறித்து அரசு முடிவு எடுக்க உள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P