Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 25 ஆகஸ்ட் (ஹி.ச.)
அரிய வகை ரத்த உறைதல் குறைபாட்டு நோயான ஹீமோபிலியா குறித்து தமிழக சட்டப்பேரவையில் இன்று கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
பொன்னேரி தொகுதி தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ். ரவி இந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார்.
அப்போது பேசிய அவர், ஹீமோபிலியா என்பது பரம்பரை ரீதியாக ஏற்படும் ரத்தம் உறையாமை நோய் என்றும், இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறிய காயம் ஏற்பட்டால் கூட அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலை உருவாகிறது என்றும் குறிப்பிட்டார்.
தமிழகத்தில் ஆயிரக்கணக்கானோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்குத் தேவையான ஃபேக்டர் ஊசி மருந்துகள் விலை அதிகம் என்பதால் ஏழை எளிய குடும்பங்களால் தொடர்ந்து சிகிச்சை பெற முடியாத சூழல் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே அரசு மருத்துவமனைகளில் ஹீமோபிலியா நோயாளிகளுக்கு தடையின்றி இலவசமாக ஃபேக்டர் மருந்துகள் வழங்கவும், அனைத்து மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளிலும் ஹீமோபிலியாவுக்கென தனி சிறப்பு சிகிச்சை பிரிவை ஏற்படுத்தவும், இந்த நோய் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தவும் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
Hindusthan Samachar / vidya.b