கோவை குற்றாலம் அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக இன்று தற்காலிகமாக மூடல்
கோவை, 25 ஆகஸ்ட் (ஹி.ச.) மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, கோவை குற்றாலம் சுற்றுலா பகுதி இன்று (ஆகஸ்ட் 25) தற
Covai Courtallam


கோவை, 25 ஆகஸ்ட் (ஹி.ச.)

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, கோவை குற்றாலம் சுற்றுலா பகுதி இன்று

(ஆகஸ்ட் 25) தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், கோவை குற்றாலம் அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அருவிப் பகுதியில் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படக்கூடிய சூழல் நிலவுகிறது.

இதனைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா பகுதியை பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பயன்படுத்துவதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

வெள்ளப்பெருக்கு மற்றும் மழை நிலவரத்தை தொடர்ந்து வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். நிலைமை சீரடைந்து சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பான சூழல் ஏற்பட்ட பின்னர், மீண்டும் சுற்றுலா அனுமதி வழங்குவது தொடர்பாக வனத்துறை முடிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாதுகாப்பு காரணங்களுக்காக விதிக்கப்பட்டுள்ள தடையை பொதுமக்கள் கடைப்பிடித்து, கோவை குற்றாலம் பகுதிக்கு செல்லாமல் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வனத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN