தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் - முதல்வர் விஜய் புகழாரம்
சென்னை, 25 ஆகஸ்ட் (ஹி.ச.) தேமுதிக நிறுவனத் தலைவரும், மறைந்த நடிகருமான கேப்டன் விஜயகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு (ஆகஸ்ட் 25), தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவருக்கு தனது சமூக வலைதளப் பக்கத்தில் மனமார்ந்த புகழ் வணக்கம் செலுத்தியுள்ளார
DMDK founder Vijayakanth's birthday – CM Vijay pays tribute.


சென்னை, 25 ஆகஸ்ட் (ஹி.ச.)

தேமுதிக நிறுவனத் தலைவரும், மறைந்த நடிகருமான கேப்டன் விஜயகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு (ஆகஸ்ட் 25), தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவருக்கு தனது சமூக வலைதளப் பக்கத்தில் மனமார்ந்த புகழ் வணக்கம் செலுத்தியுள்ளார்.

அவர் எக்ஸ் தளத்தில் இன்று கூறியிருப்பதாவது,

மனிதநேயம், துணிச்சல், தன்னலமற்ற சேவை ஆகியவற்றை அடையாளமாகக் கொண்ட தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு எனது புகழ் வணக்கங்களைச் செலுத்துகிறேன்.

திரைத்துறையில் தனக்கெனத் தனி முத்திரை பதித்ததோடு, அரசியலில் மக்கள் நலனை முன்னிறுத்திய தலைவராகவும் திகழ்ந்து, ஏழை, எளிய மக்களின் மீது அன்பும், அக்கறையும் கொண்டு கொடையுள்ளத்தோடு உதவிய புரட்சிக் கலைஞரின் புகழ் என்றும் நிலைத்தோங்கட்டும்!

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b