Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 25 ஆகஸ்ட் (ஹி.ச.)
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வரும் சட்டப்பேரவைக் கூட்டத்தில்
நாகர்கோவில் தொகுதி திமுக எம்எல்ஏ ஆஸ்டின் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.
பொதுவாக சட்டப்பேரவை மரபுப்படி எதிர்க்கட்சிகள் தான் கேள்வி கேட்க வேண்டும், ஆளுங்கட்சி அதற்கு பதில் சொல்ல வேண்டும் என்பதே நடைமுறை.
இந்த நிலையில் திமுக எம்எல்ஏ எதிர்க்கட்சிகளை நோக்கி கேள்வி எழுப்பலாமா என்ற கேள்வி எழுந்து அவையில் சலசலப்பை ஏற்படுத்தியது.
காங்கிரஸ் மற்றும் அதிமுகவில் இருந்து விலகி தற்போது திமுகவில் இணைந்துள்ள ஆஸ்டின், எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்து பேசினார்.
அவரது பேச்சுக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர்.
இதேபோல், அதிமுக எம்எல்ஏ தளவாய் சுந்தரம் பேசியபோதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
தளவாய் சுந்தரம் பேசுவதற்கு ஏன் அனுமதி அளித்தீர்கள் என திமுக தரப்பில் குரல்கள் எழுந்தன. இதனால் அவையில் சிறிது நேரம் கூச்சல் குழப்பம் நிலவியது.
இந்த பரபரப்பான சூழலில், திமுக எம்எல்ஏ பூண்டி கலைவாணன் தனது இருக்கையில் இருந்து எழுந்து வெளியே சென்றது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்டோர் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b