Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 25 ஆகஸ்ட் (ஹி.ச)
தமிழக சட்டப்பேரவையின் நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடரில், இன்று மிக முக்கியத்துவம் வாய்ந்த தொழில்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது.
காலை 10 மணிக்கு பேரவை கூடியதும், இரு துறைகள் தொடர்பாக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதிகளில் தொழிற்சாலைகள் அமைத்தல், சிப்காட் வளாகங்கள் விரிவாக்கம், தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பேச உள்ளனர்.
குறிப்பாக தமிழகத்திற்கு புதிய முதலீடுகளை ஈர்ப்பது, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவது குறித்து உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து விவாதங்களுக்கு பதிலளிக்கும் வகையில் தொழில்துறை அமைச்சர் பிரபு, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் கீர்த்தனா மற்றும் துணைத் துறைக்கான அமைச்சர் குமார் ஆகியோர் பதிலுரை வழங்குகின்றனர்.
அப்போது, தமிழகத்தில் புதிய தொழில் கொள்கை, இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் ஐ.டி. பூங்காக்கள் அமைத்தல், ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான சலுகைகள் மற்றும் புதிய வேலைவாய்ப்பு திட்டங்கள் குறித்த பல முக்கிய புதிய அறிவிப்புகளை அவர்கள் வெளியிட உள்ளதாக சட்டப்பேரவை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Hindusthan Samachar / vidya.b