Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 25 ஆகஸ்ட் (ஹி.ச.)
தே.மு.தி.க. நிறுவனரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மறைந்த விஜயகாந்தின் பிறந்தநாளையொட்டி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி எக்ஸ் தளத்தில் அவரை நினைவுகூர்ந்து பதிவு வெளியிட்டுள்ளார்.
தமிழ்த் திரைத்துறையில் தனக்கென தனி முத்திரை பதித்ததுடன், அரசியலிலும் தனக்கென ஒரு பாதையை உருவாக்கிய விஜயகாந்தின் கலைத்துறை சாதனைகளையும், பொதுவாழ்வில் தமிழக மக்கள் மீது அவர் கொண்டிருந்த பேரன்பையும் எடப்பாடி பழனிசாமி நினைவுகூர்ந்துள்ளார்.
மேலும், “மண்ணை விட்டு மறைந்தாலும், ‘கேப்டன்’ என்ற பெயரும், உங்கள் புகழும் காலம் கடந்து நிலைத்திருக்கும்” என விஜயகாந்தின் புகழை போற்றியுள்ளார்.
கேப்டன் விஜயகாந்தின் பிறந்தநாளில் அவரது அரசியல் மற்றும் திரைத்துறைப் பங்களிப்புகளை நினைவுகூர்ந்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இந்தப் பதிவு, விஜயகாந்த் மீதான அவரது மரியாதையை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ