தங்கம் வெள்ளி விலை சற்று குறைந்ததால் நகை பிரியர்கள் நிம்மதி
சென்னை, 25 ஆகஸ்ட் (ஹி.ச.) ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வருகிறது. அந்த வகையில் நேற்றைய நிலவரப்படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் ரூ.15,030க்கும், சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு சவ
தங்கம்


சென்னை, 25 ஆகஸ்ட் (ஹி.ச.)

ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வருகிறது. அந்த வகையில் நேற்றைய நிலவரப்படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் ரூ.15,030க்கும், சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,20,240க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தொடர்ந்து இன்று தங்கம் விலை கணிசமாக குறைந்துள்ளதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதன் படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.15,010க்கும், சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.1,20,080க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.265க்கும், ஒரு கிலோ ரூ.2,65,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P