ஆண் நண்பருடன் தப்பியோடிய மனைவியை கல்லால் தாக்கி கொலை செய்த கணவன் கைது
கிருஷ்ணகிரி, 25 ஆகஸ்ட் (ஹி.ச.) கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த தளி அருகே உள்ள கும்ளாபுரம் கிராமத்தில் வசிப்பவர் எல்லப்பா மகன் நாராயணசாமி(39) கூலி தொழிலாளி. இவருடைய மனைவி வித்யா(30). வித்யாவிற்கும் அதே ஊரைச்சேர்ந்த கார்பெண்டர் வேலை செய்யும் புன
Hosur


கிருஷ்ணகிரி, 25 ஆகஸ்ட் (ஹி.ச.)

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த தளி அருகே உள்ள கும்ளாபுரம் கிராமத்தில் வசிப்பவர் எல்லப்பா மகன் நாராயணசாமி(39) கூலி தொழிலாளி. இவருடைய மனைவி வித்யா(30).

வித்யாவிற்கும் அதே ஊரைச்சேர்ந்த கார்பெண்டர் வேலை செய்யும் புனித் என்பவருக்கும் கடந்த ஒரு வருடமாக கள்ளக்காதல் இருந்துள்ளதாக தெரிகிறது.

இதை அறிந்த நாராயணசாமி கண்டித்துள்ளார். கள்ளகாதலை கைவிட கூறி வந்துள்ளார். ஆனால் வித்யா கள்ளகாதலை கைவிடாமல் இருந்துள்ளார்.

அதில் கணவன் மனைவியிடையே தகராறு ஏற்பட்டு ஊரில் பெரியார்கள் முன்னிலையில் சமரசம் செய்து வந்துள்ளனர்.

இந்நிலையில் வித்யா தனது பெயரில் இருந்த 8 செண்ட் நிலத்தில் 1500 சதுர அடி நிலத்தை அதே ஊரைச்சேர்ந்த அம்ரீஷ் என்பருக்கு ரூ 22லட்சத்திற்கு விற்றுவிட்டு பணத்தைப் பெற்றுக் கொண்டு கடந்த ஒரு வரத்திற்கு முன்பு கள்ளக்காதலன் புனித் என்பருடன் கர்நடாடக மாநிலம் கர்நாடகா மாநிலம் ஆனேக்கல்லுக்கு சென்றுவிட்டார்.

பின்னர் நேற்று மதியம் வித்யா கும்ளாபுரம் கிராமத்தில் உள்ள பல்லவன் வங்கியில் தனது சேமிப்பு கணக்கில் வைத்திருந்த மீதி பணத்தை எடுக்க சென்றுள்ளார். இதை அறிந்த நாராயணசாமி வித்யாவிடம் சென்று பணத்தை மற்றும் சொத்தை குழந்தைகள் பெயரில் எழுதி வைக்குமாறு கேட்டு தகராறு செய்து வங்கியிலிருந்து வெளியே கூட்டி வந்துள்ளார்.

அப்போது இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டு கீழே கிடந்த கல்லை எடுத்து வித்யாவை கடுமையாக தாக்கியுள்ளதாக தெரிகிறது அதில் தப்பி செல்ல முற்படும் போது மீண்டும் கல்லால் தலை மற்றும் முகத்தில் கடுமையாக தாக்கியதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து வித்யா சம்பவ இடத்தில் இறந்தார்.

தகவல் அறிந்த தேன்கனிக்கோட்டை டிஎஸ்பி ஆனந்தராஜ், தளி காவல் ஆய்வாளர் பெரியதம்பி மற்றும் போலீசார் சம்பவ இடம் சென்று வித்யாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மனைவியை கொலை செய்து தப்பி ஓடிய நாராயணசாமியை கைது செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் நாராயணசாமிக்கு கடன் இருந்தாகவும், தனக்கு சொந்தமான 8 செண்டு நிலத்தை வித்யாவின் பெயரில் எழுதி வைத்திருந்ததாகவும், கடந்த மாதம் நிலத்தை விற்ற பணத்துடன் கள்ளகாதலனுடன் சென்று விட்டதாகவும், நான் வித்யாவிடம் சென்று பணத்தையும், மீதமுள்ள சொத்தை குழந்தைகள் பெயரில் எழுதி வைக்குமாறு கேட்டதாகவும் வித்யா மறுத்துவிட்டதால் நான் திரும்பி வந்து விட்டோன்.

இந்நிலையில் பணத்தை எடுக்க வங்கிக்கு வித்யா வந்த போது தர வேண்டும், நிலத்தை குழந்தைகள் பெயரில் எழுத வேண்டும் என கூறினேன் ஆனால் பணத்தை எடுத்து தர மருத்து தகாரறு செய்ததால் ஆத்திரத்தில் கல்லால் தாக்கி கொலை செய்ததாக போலீசில் தெரிவித்துள்ளார்.

மனைவி நிலத்தை விற்ற பணத்துடன் கள்ளகாதலனுடன் சென்றதால் மனைவியை கல்லால் தாக்கி கொலை செய்த சம்பவம் கும்மளாபுரம் கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Hindusthan Samachar / ANANDHAN