Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 25 ஆகஸ்ட் (ஹி.ச.)
சென்னை அருகே முட்டுக்காடு கிராமத்தில் வேம்படியம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து கலைஞர் சர்வதேச கருத்தரங்க மையம் கட்டப்படுவதாகக் கூறி தொடரப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத்துறை விரிவான அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஓய்வுபெற்ற ராணுவ வீரர் சந்தானம் தொடர்ந்த வழக்கில், கோவில் நிலத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், சுமார் 60 சதவீத பணிகள் முடிந்துவிட்டதால், கட்டுமானங்களை அகற்ற உத்தரவிட வேண்டும் என்றும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
ஆனால், கோவில் நிலத்தை ஆக்கிரமித்து எந்த கட்டுமானமும் மேற்கொள்ளப்படவில்லை என அறநிலையத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட நிலம் மற்றும் கட்டுமானங்கள் தொடர்பான முழு விவரங்களுடன் அறிக்கை தாக்கல் செய்ய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கை செப்டம்பர் 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P