Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 25 ஆகஸ்ட் (ஹி.ச.)
மதுரையில் சு.வெங்கடேசன் எம்பி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில்,
மதுரை அரசு மருத்துவமனைக்கு புதிய கட்டிடங்கள் அமைக்க வகைமாற்றம் செய்ய கடந்த 8 ஆண்டுகளில் மாநில நிர்வாகத்தோடு பல அழுத்தங்கள் கொடுத்தும் நடைபெறவில்லை.
ஆனால் இப்போது மதுரையிலுள்ள பழைய ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கும், அண்ணா பேருந்து நிலையத்தில் மண்டல புற்றுநோய் மருத்துவமனைக்கு 8 ஆண்டுகள் போராட்டத்தின் மிகப்பெரிய வெற்றி.
ஒன்றிய அரசு அறிவித்த தீவிர சிகிச்சை பிரிவுக்கான மருத்துவமனை 44 கோடி மதிப்பில் அண்ணா பேருந்து நிலையத்தில் வரப்போகிறது.
84 கோடியில் ஒருங்கிணைந்த புற்றுநோய் சிகிச்சை மையம் பழைய ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக அமைந்துள்ள பகுதியில் தொடங்கவுள்ளது.
நம் தலைமுறைக்கு செய்துள்ள மிகப்பெரிய பணி. முதலமைச்சருக்கு நன்றி, அமைச்சர்களுக்கு இதற்கு விடாத முயற்சி செய்த மாவட்ட ஆட்சியருக்கு நன்றி.
தமிழகத்தில் அதிக புறநோயாளிகள் மற்றும் உடற்கூராய்வுகள் நடைபெறுவது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை.
சென்னை சிறை இடமாற்றம் செய்யபோது அரசு மருத்துவமனை செயல்பட்டது. ஆனால் மருத்துவமனைக்கு ஒரு அடி கூட இல்லாமல் இருந்தது.
நிதி ஒரு பக்க போராட்டம், திட்டம் கிடைப்பது போராட்டம் இப்போது நிதியும், நிலமும் கிடைத்துள்ளது. பல ஆயிரம் நோயாளிகள் பயன்பெறுகின்றனர்.
உயர்கல்வித்துறை மட்டுமல்ல; தலைமை செயலகத்தில் இருந்து காக்ரோச் பார்ட்டி, இடது சாரி கட்சிகள் போராட்டத்தில் பங்கேற்க கூடாது என கூறி சுற்றறிக்கை திரும்ப பெறப்பட்டது.
இதற்கு அமைச்சர் மன்னிப்பு கோரியிருக்கிறார். அதனை ஏற்றுக்கொள்கிறோம்.
பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து செய்யப்பட்டது தொடர்பான கேள்விக்கு?
பரந்தூர் விமான நிலையம் மட்டும் தான் தமிழகத்தின் வளர்ச்சி சம்மந்தப்பட்டதா?
மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்காக 4 ஆண்டுகளாக போராடி வருகிறோம் , மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்கு எந்த நில எடுப்பும் நடைபெறவில்லை.
வளர்ச்சி என்பது ஒரு கண்ணில் வெண்ணெய், ஒரு கண்ணில் சுண்ணாம்பு உள்ளது.
மதுரை விமான நிலைய விரிவாக்க பணிகள் மாநில அரசின் நில எடுப்பு தாமதத்தால் பணிகள் கிடப்பில் உள்ளன.
விமான நிலைய விரிவாக்க பகுதியில் குண்டாறு கால்வாய் செல்வதை 6 ஆண்டுகளுக்கு பின்னர் கண்டறிந்து கூறுகின்றனர். இதனை ஒரு ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்திருந்தால் தெரிந்திருக்கும்.
பரந்தூர் விமான நிலையத்திற்கு 2 வருடத்தில் ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. ஆனால் மதுரை விமான நிலையத்திற்கு ஏன் நில கையகப்படுத்த முடியவில்லை.
தூய்மை பணிகளை தனியார் நிறுவனங்களுக்கு கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.
தனியார் நிறுவனங்களுக்கு கொடுப்பதை 50% செலவழித்தால் அரசு நிர்வாகமே செயல்படுத்த இயலும்.
தனியார் நிறுவனங்களில் மையப்படுத்தி தூய்மை பணிகளை வழங்க கூடாது.
தொகுதி மறுவரையறைக்கு ஆளும் பாஜக அரசு முழு தயாராக உள்ளது. தொகுதி மறுவரைவு என்பது கூட்டாட்சி முறைக்கு பாதகம்,
கோவை, மதுரை மெட்ரோவிற்கு அரதபழமையான கதையை சொல்கிறார்கள்; மதுரை, கோவை மெட்ரோ என்பது வளர்ச்சிக்கு அவசியமானது என்று பேசினார்.
Hindusthan Samachar / ANANDHAN