Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 25 ஆகஸ்ட் (ஹி.ச.)
டெல்லி போலீசாரின் குற்றப்பிரிவுக்கும் குற்றவாளி ஒருவருக்கும் இடையே நேற்று இரவு துப்பாக்கிச் சண்டை நடைபெற்றதாகவும், இதில் பல சுற்று துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் அதிகாரிகள் இன்று தெரிவித்தனர்.
குற்றவாளி டெல்லியை நோக்கி வருவதாக குற்றப்பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து மயூர் விகாரில் இருந்து அக்சர்தாமை இணைக்கும் சாலையின் வளைவுப் பகுதியில் போலீசார் வலைவிரித்து காத்திருந்தனர். குற்றவாளியைக் கண்டதும் போலீசார் சுற்றி வளைத்தபோது துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளது.
இந்தச் சண்டைக்குப் பிறகு மீரட்டைச் சேர்ந்த குற்றவாளியை குற்றப்பிரிவு குழுவினர் மடக்கிப் பிடித்தனர். இந்த நடவடிக்கையின் போது குற்றவாளிக்கு துப்பாக்கி குண்டு காயம் ஏற்படவில்லை என்றும், போலீசார் மற்றும் பொதுமக்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடி என போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.
டெல்லியின் சாவ்லா பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் மற்றும் கொலை தொடர்பான வழக்குகளும் இதில் அடங்கும்.
கைது செய்யப்பட்ட நபரிடம் குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b