Enter your Email Address to subscribe to our newsletters

நெல்லை, 25 ஆகஸ்ட் (ஹி.ச.)
நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானை அடுத்த அணைத்தலையூர் காலனி தெருவை சேர்ந்தவர் தேவேந்திரன். இவரது மகன் ஆறுமுகம்(வயது 36).
இவர் சம்பவத்தன்று அந்த பகுதியில் ஆற்றங்கரையோரத்துக்கு சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த 14 வயது சிறுமியிடம் ஆபாச சைகை காட்டி அழைத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவிக்கவே, அவர்கள் ஊரக அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து ஆறுமுகத்தை கைது செய்தனர்.
கங்கை கொண்டான் அணைத்தலையூர் மறக்குடி வடக்கு தெருவை சேர்ந்தவர் முத்துக்குமார்(23).
இவர் 16 வயதுடைய சிறுமியை அடிக்கடி நேரில் பார்த்து தன்னை காதலிக்குமாறு தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
அந்த சிறுமி தனது வீட்டின் கடன் சுமையால் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வேலைக்கு சென்று வரும் நிலையில், பணி செய்யும் இடத்திற்கும் சென்று முத்துகுமார் அந்த சிறுமிக்கு காதல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.
இதனால் சிறுமியின் பெற்றோர் ஊரக அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்து முத்துகுமாரை கைது செய்தனர்.
Hindusthan Samachar / ANANDHAN