Enter your Email Address to subscribe to our newsletters

நெல்லை, 25 ஆகஸ்ட் (ஹி.ச.)
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் டாஸ்மாக் ஊழியர்கள் 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், பல்வேறு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன.
18 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நடவடிக்கையை திரும்பப் பெற வலியுறுத்தி, ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று கடைகளின் சாவிகளுடன் டாஸ்மாக் மண்டல மேலாளர் அலுவலக வளாகத்தில் ஏராளமான பணியாளர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்புமாறு முதுநிலை மண்டல மேலாளர் கோட்டை குமார் தலைமையில் ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
நேற்று ஒரு நாள் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டிருந்த நிலையில், மதுபானப் பிரியர்கள் தனியார் பார்களை நாடினர். இதனால் அங்கு மதுபானங்கள் வேகமாக விற்றுத் தீர்ந்ததாக கூறப்படுகிறது.
இன்றும் போராட்டம் தொடரும் பட்சத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருக்கும் நிலை ஏற்படும் என்பதால், மதுபானம் கிடைக்காமல் நெல்லை, தென்காசி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் அருகிலுள்ள வெளி மாவட்டங்களுக்கு செல்லும் சூழல் உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / GOKILA arumugam