சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே இரவு நேர மின்சார ரயில்கள் ரத்து
சென்னை, 25 ஆகஸ்ட் (ஹி.ச.) சென்னை கடற்கரை மற்றும் தாம்பரம் இடையே இயக்கப்படும் இரவு நேர மின்சார ரயில்கள் இன்று முதல் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக சென்னை புறநகர் ரயில் பயணிகளுக்கு தெற்கு ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூ
Night electric trains between Chennai Beach and Tambaram cancelled


சென்னை, 25 ஆகஸ்ட் (ஹி.ச.)

சென்னை கடற்கரை மற்றும் தாம்பரம் இடையே இயக்கப்படும் இரவு நேர மின்சார ரயில்கள் இன்று முதல் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக சென்னை புறநகர் ரயில் பயணிகளுக்கு தெற்கு ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ரூ.842 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைப்பு மற்றும் நவீனமயமாக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் காரணமாகவே இரவு நேரங்களில் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, இன்று முதல் வரும் செப்டம்பர் 6-ம் தேதி வரை, இரவு 11.15 மணி முதல் அதிகாலை 4.15 மணி வரை சென்னை கடற்கரை - தாம்பரம் வழித்தடத்தில் எந்த மின்சார ரயிலும் இயக்கப்படாது.

மேலும், இரவு 10.20 மணி முதல் 11.59 மணி வரை சென்னை கடற்கரையில் இருந்து புறப்படும் அனைத்து மின்சார ரயில்களும் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன. அதேபோல், அதிகாலை 3.50 மணிக்கு சென்னை கடற்கரையில் இருந்து புறப்படும் முதல் மின்சார ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுதவிர, செங்கல்பட்டு மற்றும் தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி வரும் ரயில்கள், கடற்கரை - தாம்பரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த வழித்தடத்தில் இரவு நேரத்தில் பயணிக்க திட்டமிட்டுள்ள பயணிகள் மாற்று போக்குவரத்து வசதிகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு ரயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b