Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 25 ஆகஸ்ட் (ஹி.ச.)
ஓணம் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் இந்திய ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது.
அந்த வகையில் கர்நாடக மாநிலம் ஹூப்ளி - கேரள மாநிலம் கோட்டயம் இடையே சேலம், ஈரோடு வழியாக சிறப்பு ரயில் இன்று இயக்கப்படுகிறது.
இந்த சிறப்பு ரயில் ஹூப்ளியில் இருந்து புறப்பட்டு பெங்களூரு, கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை வழியாக தமிழகத்திற்குள் நுழைந்து சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக கேரள மாநிலம் பாலக்காடு, திருச்சூர், ஆலுவா, எர்ணாகுளம் டவுன் வழியாக கோட்டயத்தை சென்றடையும் வகையில் இயக்கப்படுகிறது.
இதேபோல் மறுமார்க்கமாக கோட்டயத்தில் இருந்து ஹூப்ளிக்கு நாளை சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில்கள் கோட்டயம், எர்ணாகுளம், ஆலுவா, திருச்சூர், பாலக்காடு, போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஓணம் பண்டிகை காலத்தில் சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்பும் பயணிகளுக்கு இந்த சிறப்பு ரயில்கள் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b