டாஸ்மாக் முறைகேடு வழக்கு -கார்த்திக் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு
சென்னை, 25 ஆகஸ்ட் (ஹி.ச.) முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரானதாக கூறப்படும் டாஸ்மாக் முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கரூரைச் சேர்ந்த கார்த்திக், ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு தொடர்பான வ
உயர்நீதிமன்றம்


சென்னை, 25 ஆகஸ்ட் (ஹி.ச.)

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரானதாக கூறப்படும் டாஸ்மாக் முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கரூரைச் சேர்ந்த கார்த்திக், ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு தொடர்பான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, மனுதாரர் தரப்பில், வழக்கில் ஒருவர் தலைமறைவாக உள்ளார் என்பதற்காக கார்த்திக்கை நீண்ட நாட்கள் சிறையில் அடைத்து வைக்க வேண்டிய அவசியமில்லை என வாதிடப்பட்டது. மேலும், அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் கோரப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த காவல்துறை தரப்பு, செந்தில் பாலாஜியைவிட கார்த்திக் அதிக செல்வாக்கு கொண்டவர் என்பதால், அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டால் வழக்கில் வாக்குமூலம் அளிக்க உள்ள சாட்சிகள் அச்சப்படக்கூடும் என வாதிட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட சென்னை உயர்நீதிமன்றம், கார்த்திக் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P