Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 25 ஆகஸ்ட் (ஹி.ச.)
சென்னை மற்றும் தமிழ்நாட்டின் எதிர்கால தொழில் வளர்ச்சிக்கு இரண்டாவது விமான நிலையம் அவசியம் என சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
பரந்தூர் விமான நிலையத்திற்கான நிலம் தேர்வு செய்யப்பட்டது குறித்து சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர், பல்வேறு இடங்களை ஆய்வு செய்த பின்னரே குறைந்த பாதிப்புகள் ஏற்படும் வகையில் பரந்தூர் தேர்வு செய்யப்பட்டது என்பதை சுட்டிக்காட்டினார்.
தற்போது மாற்று இடம் குறித்து ஆய்வு செய்யப்படும் என தவெக அரசு கூறி வரும் நிலையில், தமிழ்நாட்டின் எதிர்கால தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமான இரண்டாவது விமான நிலையத்தின் அவசியத்தையும் அமைச்சர் எடுத்துரைத்தார்.
மேலும், தமிழ்நாட்டை 1.5 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாற்ற வேண்டும் என ஒருபுறம் கூறிவிட்டு, அதற்கான அடித்தளமாக அமையும் முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களை மறுபுறம் எதிர்ப்பது முரண்பாடான நிலைப்பாடு என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
Hindusthan Samachar / P YUVARAJ