உளுந்தூர்பேட்டை அருகே சோகம்: காதலி கிணற்றில் சடலமாக மீட்பு -காதலன் தூக்கிட்டு தற்கொலை
கள்ளக்குறிச்சி, 25 ஆகஸ்ட் (ஹி.ச.) கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே காதலி சடலமாக மீட்கப்பட்ட நிலையில், காதலன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாலி கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணவேணி (23) மற்றும் அதே கிர
தற்கொலை


கள்ளக்குறிச்சி, 25 ஆகஸ்ட் (ஹி.ச.)

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே காதலி சடலமாக மீட்கப்பட்ட நிலையில், காதலன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாலி கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணவேணி (23) மற்றும் அதே கிராமத்தைச் சேர்ந்த டாடா ஏஸ் ஓட்டுநர் கவிதாஸ் (27) ஆகியோர் கடந்த 3 ஆண்டுகளாக குடும்பத்தினருக்கு தெரியாமல் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்ற கிருஷ்ணவேணி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால், எடைக்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதற்கிடையே, இன்று காலை விவசாயக் கிணற்றில் கிருஷ்ணவேணி சடலமாக கிடந்தது தெரியவந்தது. இதனை அறிந்த கவிதாஸ், கிணற்றில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ள புதரில் வேப்ப மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற எடைக்கல் போலீசார் இருவரது உடல்களையும் மீட்டு, உடற்கூறாய்வுக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இருவரின் உயிரிழப்புக்கும் திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தது காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து எடைக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam