Enter your Email Address to subscribe to our newsletters

கொல்கத்தா , 25 ஆகஸ்ட் (ஹி.ச.)
மேற்கு வங்காளத்தில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்த 4 மாதங்களிலேயே அந்த கட்சியின் உண்மை முகத்தை மக்கள் புரிந்து கொண்டுவிட்டதாக திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
நான் அரசியல் துறவறம் மேற்கொள்ளப்போவதில்லை. அரசியலில் பா.ஜனதாவை இல்லாமல் ஆக்கும் வரை நான் ஓயமாட்டேன்.
தேசிய குடிமக்கள் பதிவேட்டை (NRC) பின்வாசல் வழியாக அமல்படுத்தும் முயற்சிதான் மக்கள்தொகை கணக்கெடுப்பு. எனவே, மக்கள்தொகை கணக்கெடுப்பு படிவங்களில் கையெழுத்திடுவதற்கு முன்பும், தனிப்பட்ட தகவல்களை பகிர்வதற்கு முன்பும் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இல்லையென்றால், அவர்கள் சேமித்து வைத்துள்ள பணத்தைக்கூட எடுத்துவிடுவார்கள் என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA