19-வது திருமண நாளில் மனைவிக்கு அமைச்சர் லோகேஷ் உருக்கமான வாழ்த்து
அமராவதி , 26 ஆகஸ்ட் (ஹி.ச.) ஆந்திர மாநில அமைச்சர் நாரா லோகேஷ்–நாரா பிரம்மணி தம்பதி தங்களது 19-வது திருமண நாளை கொண்டாடினர். இதையொட்டி இருவரும் சமூக வலைதளங்களில் ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்து, தங்களது அன்பையும் பாசத்தையும் வெளிப்படுத்தினர்.
A


அமராவதி , 26 ஆகஸ்ட் (ஹி.ச.)

ஆந்திர மாநில அமைச்சர் நாரா லோகேஷ்–நாரா பிரம்மணி தம்பதி தங்களது 19-வது திருமண நாளை கொண்டாடினர்.

இதையொட்டி இருவரும் சமூக வலைதளங்களில் ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்து, தங்களது அன்பையும் பாசத்தையும் வெளிப்படுத்தினர்.

நாரா லோகேஷ் தனது மனைவி பிரம்மணியின் திருமண நாள் பதிவை பகிர்ந்து உருக்கமான வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில், “19 ஆண்டுகள், 6,940 நாட்கள். ஒவ்வொரு இன்பத்திலும், துன்பத்திலும், ஒவ்வொரு வெற்றியிலும், தோல்வியிலும் நீ எனக்கு துணையாக இருந்தாய்.

பொறுமை, வலிமை மற்றும் நிபந்தனையற்ற அன்பை வழங்கினாய். பிரம்மணி, எல்லா சூழ்நிலைகளிலும் நீ எனக்கு உறுதியான துணையாக இருந்தாய்.

திருமண நாள் வாழ்த்துகள். இதுபோல் இன்னும் பல திருமண நாட்களை நாம் இணைந்து கொண்டாட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரம்மணி மகிழ்ச்சி

முன்னதாக பிரம்மணியும் திருமண நாள் வாழ்த்தை தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். அதில்,

“திருமண நாள் வாழ்த்துகள் என் அன்பே. நாம் இணைந்து 20-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம். நாம் சேர்ந்து உருவாக்கிய வாழ்க்கை, பகிர்ந்து கொண்ட நினைவுகள் மற்றும் தொடர்ந்து கொண்டிருக்கும் இந்தப் பயணத்திற்காக நான் மிகவும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன்.

வாழ்க்கையின் ஒவ்வொரு ஏற்றத் தாழ்விலும் நீ எனக்கு துணையாக இருந்தாய். எதிர்காலத்தில் வரவிருக்கும் இன்னும் பல புதிய அனுபவங்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

2007-ல் திருமணம்

நாரா லோகேஷ் மற்றும் பிரம்மணி திருமணம் 2007-ம் ஆண்டு ஆகஸ்டு 26-ந்தேதி நடைபெற்றது.

இவர்களுக்கு தேவான்ஷ் என்ற மகன் உள்ளார்.

அரசியல் பணிகளில் நாரா லோகேஷ் தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்டு வந்தாலும், குடும்பத்திற்கும் முக்கியத்துவம் அளித்து வருகிறார். திருமண நாளையொட்டி இருவரும் பகிர்ந்து கொண்ட அன்பான பதிவுகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

அவர்களுக்கு ரசிகர்கள் மற்றும் தெலுங்குதேசம் கட்சி தொண்டர்கள் உள்ளிட்ட பலரும் திருமண நாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA