Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 26 ஆகஸ்ட் (ஹி.ச.)
ஓணம் பண்டிகையையொட்டி, உலகெங்கிலும் உள்ள மலையாளி சகோதர, சகோதரிகளுக்கு வீ தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
ஒற்றுமை மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்தின் அடையாளமாகத் திகழும் ஓணம் திருவிழா, அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி, செழிப்பு, நல்வாழ்வு மற்றும் அமைதியை கொண்டு வரட்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நல்லிணக்கத்தையும் கலாச்சாரப் பாரம்பரியத்தையும் பறைசாற்றும் இந்த மங்களகரமான திருவிழா, அனைவரது வாழ்விலும் எல்லையற்ற மகிழ்ச்சியையும் வளத்தையும் மலரச் செய்யட்டும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
உலகெங்கிலும் உள்ள மலையாளி மக்கள் அனைவருக்கும் தனது மனமார்ந்த ஓணம் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ