Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 26 ஆகஸ்ட் (ஹி.ச.)
சென்னை யானைக்கவுனி பொன்னப்பன் சந்து பகுதியில் 45 அடி ஆழமுள்ள கிணற்றை தூர்வாரச் சென்ற தந்தையும், மகனும் விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொடுங்கையூரைச் சேர்ந்த ரவி (65) மற்றும் அவரது மகன் அய்யனார் (35) ஆகிய இருவரும் கிணற்றை தூர்வாருவதற்காக இறங்கியுள்ளனர். அப்போது கிணற்றுக்குள் விஷவாயு தாக்கியதில் இருவரும் மயங்கி விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற யானைக்கவுனி போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இருவரின் சடலங்களையும் மீட்ட தீயணைப்புத்துறையினர், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக யானைக்கவுனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P