தங்கம் வெள்ளி விலை சற்றே குறைந்ததால் மக்கள் ஏமாற்றம்
சென்னை, 26 ஆகஸ்ட் (ஹி.ச.) ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வருகிறது. அந்த வகையில் நேற்றைய நிலவரப்படி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.15,010க்கும், சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு ச
தங்கம்


சென்னை, 26 ஆகஸ்ட் (ஹி.ச.)

ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வருகிறது.

அந்த வகையில் நேற்றைய நிலவரப்படி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.15,010க்கும், சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.1,20,080க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தொடர்ந்து இன்று தங்கம் விலை எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையே தொடர்கிறது.

அதன் படி 22 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.15,010க்கும், ஒரு சவரன் ரூ.1,20,080க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் 18 காரட் தங்கம் விலையும் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.12,780க்கும், ஒரு சவரன் ரூ.1,02,240க்கும் விற்பனையாகிறது.

மேலும் வெள்ளி விலையும் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.265க்கும், ஒரு கிலோ ரூ.2,65,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P