பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 3 மடங்கு அதிகரிப்பு - விவசாயிகள் மகிழ்ச்சி
ஈரோடு, 26 ஆகஸ்ட் (ஹி.ச.) ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக, பவானிசாகர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக
Inflow to Bhavanisagar Dam triples – Farmers happy.


ஈரோடு, 26 ஆகஸ்ட் (ஹி.ச.)

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக, பவானிசாகர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,011 கன அடியில் இருந்து 3,789 கன அடியாக உயர்ந்துள்ளது.

கடந்த சில நாட்களாக குறைவாக இருந்த நீர்வரத்து தற்போது கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிகரித்திருப்பது விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 51.88 அடியாக உள்ளது. அணையின் மொத்த உயரம் 105 அடி என்பது குறிப்பிடத்தக்கது. அணையில் தற்போது 4.8 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

அதே நேரத்தில், குடிநீர் தேவை மற்றும் பாசன தேவைக்காக அணையில் இருந்து வினாடிக்கு 2,400 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

நீர்வரத்து அதிகரித்துள்ளதால் வரும் நாட்களில் அணையின் நீர்மட்டம் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / vidya.b