Enter your Email Address to subscribe to our newsletters

விஜயபுரா , 26 ஆகஸ்ட் (ஹி.ச.)
கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டத்தில் உள்ள பட்னல் ஏரியில் 4 பெண்கள், 2 சிறுவர்கள் என 6 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
விஜயபுரா மாவட்டத்தில் பட்னல் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியில் சடலங்கள் மிதப்பதாக போலீசாருக்கு இன்று தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஏரியில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ஏரியில் இருந்து 4 பெண்கள் மற்றும் 2 சிறுவர்களின் சடலங்களை போலீசார் மீட்டனர். 6 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
போலீசார் விசாரணை
உயிரிழந்த 6 பேரும் யார், அவர்கள் எந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவர்கள் ஏரியில் குளிக்கச் சென்றபோது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் இந்த சம்பவம் நடந்ததா? என்பது குறித்தும் பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.
6 பேரின் அடையாளம் மற்றும் அவர்கள் ஏரிக்கு வந்ததற்கான காரணம் தெரியவரும் நிலையில், இந்த சம்பவம் தொடர்பான முழுமையான விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA