மணப்பாறை அருகே களைகட்டிய எருது ஓட்டம் – போட்டிபோட்டு சீறிப் பாய்ந்த காளைகள்
சென்னை, 26 ஆகஸ்ட் (ஹி.ச.) திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே சடையம்பட்டியில் நடைபெற்ற எருது ஓட்ட நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. சடையம்பட்டியில் உள்ள எருதுகுட்டை சாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மாடுகள் மாலை தாண்டும் நிகழ்ச்சி எனப்
Eruthu


சென்னை, 26 ஆகஸ்ட் (ஹி.ச.)

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே சடையம்பட்டியில் நடைபெற்ற எருது ஓட்ட நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.

சடையம்பட்டியில் உள்ள எருதுகுட்டை சாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மாடுகள் மாலை தாண்டும் நிகழ்ச்சி எனப்படும் எருது ஓட்டம் நடைபெற்றது. இதையொட்டி, பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான காளைகள் அழைத்து வரப்பட்டன.

பின்னர் காளைகள் குறிப்பிட்ட தூரத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, ஒரே நேரத்தில் அவிழ்த்து விடப்பட்டன. இலக்கை நோக்கி காளைகள் ஒன்றையொன்று முந்திச் செல்லும் வகையில் போட்டிபோட்டு சீறிப் பாய்ந்தன. காளைகள் வேகமாக ஓடிய காட்சியை அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

தொடர்ந்து நடைபெற்ற தேவராட்ட நிகழ்ச்சியும் பார்வையாளர்களை கவர்ந்தது. பாரம்பரிய முறைப்படி நடைபெற்ற இந்த விழாவில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு நிகழ்ச்சிகளை கண்டுகளித்தனர்.

Hindusthan Samachar / P YUVARAJ